/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வேப்பங்கொட்டை கரைசலால் செடிகளுக்கு நன்மைகள்
/
வேப்பங்கொட்டை கரைசலால் செடிகளுக்கு நன்மைகள்
ADDED : மே 29, 2024 11:24 PM
பெ.நா.பாளையம் : வேப்பங்கொட்டை கரைசலால், செடிகளுக்கு பூச்சிகளால் ஏற்படும் நோய் தாக்குதல்களை தடுக்க முடியும் என, முன்னோடி விவசாயிகள் அறிவுரை கூறினர்.
வேப்பங்கொட்டை கரைசலில், 18 வகையான ஆல்கலாய்டுகள் உள்ளன. வேப்பங்கொட்டையில் எடுக்கப்படும் வேப்பெண்ணெய் சிறந்த இயற்கை முறை பூச்சி மருந்தாகவும், நோய்களை கட்டுப்படுத்த கூடியதாகவும் உள்ளது.
வேப்ப எண்ணெய் பயன்படுத்துவதை விட, வேப்ப முத்துக்களை சேகரித்து, அதை இடித்து, பயன்படுத்துவது அதிக நன்மை தரும். இதில், 18 வகையான ஆல்கலாய்டுகள் முழுமையாக கிடைக்கின்றன. வேப்பங்கொட்டை கரைசலை பயிர்களுக்கு தெளிக்கும்போது, கரைசல் பயிர்களின் மேல் படிகிறது.
பூச்சி கட்டுப்பாடு மற்றும் நோய் கட்டுப்பாடு இரண்டிற்கும் வேப்பங்கொட்டை கரைசல் நல்ல தீர்வாக உள்ளது. வேம்பின் வாசனை, பூச்சிகளை விரட்டும். வேம்பின் கசப்பு சுவையால், பூச்சிகள் பயிரை சாப்பிடாது. கசப்பு சுவையையும் மீறி உண்ணும் பூச்சிகளின் வயிறு மந்தம் அடைகிறது. தொடர்ந்து உண்ணும் போது பூச்சிகளுக்கு பக்கவாதம் ஏற்பட்டு இறந்து விடுகின்றன. என்றனர்.