/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பெங்களூரு பஸ்சில் மூட்டை பூச்சி தொல்லை
/
பெங்களூரு பஸ்சில் மூட்டை பூச்சி தொல்லை
ADDED : செப் 12, 2024 08:37 PM
ஊட்டி : 'ஊட்டி - பெங்களூரு பஸ்சில் மூட்டை பூச்சி தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஊட்டியில் நுகர்வோர் காலாண்டு கூட்டம், அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு, நீலகிரி மண்டல பொது மேலாளர் முரளி தலைமை வகித்தார்.
நுகர்வோர் சார்பில், சிவசுப்ரமணியம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று பேசுகையில், 'கோத்தகிரி- மைசூர் பஸ் குன்னுார் செல்லாமல் ஊட்டி வந்து செல்ல வேண்டும்; நடத்துனர்கள் சிலர் சில்லறை தராமல் அலைகழிக்கும் போக்கு உள்ளதை தடுக்க வேண்டும்; மஞ்சூர், பந்தலுார் பகுதிகளுக்கு நேர காப்பாளர் நியமிக்க வேண்டும்; ஊட்டி - பெங்களூரு பஸ்சில் மூட்டை பூச்சி தொலையை கட்டுப்படுத்த வேண்டும்,' என்றனர்.
பொதுமேலாளர் முரளி பேசுகையில், '' கடந்த, 14 ஆண்டுகளுக்கு மேலான பஸ்சை இயக்க இயலாது. அதற்கு பதில் புதிய பஸ்கள் பெறப்படுகிறது. 7 ஆண்டு கடந்த பஸ்களுக்கு புது பாடி கட்டப்பட்டு இயக்கபடுகிறது. 30 சிறிய பஸ்களில், 14 பஸ்கள் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. பெங்களூரு பஸ்சில் உள்ள குறைபாடுகள் தீர்க்கப்படும்,'' என்றார்.

