/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நாட்டின் ஒற்றுமையை பா.ஜ., சீர்குலைக்கிறது: ராகுல்
/
நாட்டின் ஒற்றுமையை பா.ஜ., சீர்குலைக்கிறது: ராகுல்
ADDED : ஏப் 16, 2024 01:03 AM

பந்தலுார்:''நாட்டின் ஒற்றுமையை பா.ஜ., சீர்குலைக்கிறது,'' என, காங்., எம்.பி., ராகுல் கூறினார்.
நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகே தாளூர் பகுதிக்கு, நேற்று காலை, 10:00 மணிக்கு காங்., வயநாடு தொகுதி எம்.பி., ராகுல் மைசூரில் இருந்து ஹெலிகாப்டரில் வந்தார்.
அவரை, காங்., மூத்த நிர்வாகிகள் வரவேற்றனர். காரில், தாளூர் பகுதியில் உள்ள சர்ச் மண்டபத்திற்கு சென்றார்.
அப்போது, கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் கல்லுாரி செயலர் ராசித் கசாலி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
மாணவர்களுடன், 'செல்பி' எடுத்து கொண்டார். தொடர்ந்து, தனியார் மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:
இந்தியா ஒற்றுமை மிகுந்த நாடு. இதை மதம், மொழி, ஜாதி ரீதியாக ஆளும் பா.ஜ., பிளவுபடுத்துகிறது.
அனைத்து மதங்களும், மொழிகளும் இணைந்து ஒற்றுமையாக செயல்படுவதை, பா.ஜ., ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
காங்., ஆட்சிக்கு வந்தால், மகளிருக்கு ஆண்டிற்கு ஒரு லட்சம் ரூபாய்; படித்த இளைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகை; 100 நாள் திட்ட பணியாளர்களுக்கு, 400 ரூபாய் சம்பளம் உட்பட பல திட்டங்களை செயல்படுத்தும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி, அனைத்து தரப்புமக்க ளும் மேம்படும் வகையில் திட்டங்கள் நிறை வேற்றப்படும்.
பா.ஜ., தேர்தல் அறிக்கையில் எந்த திட்டங்களும் இல்லை. எனவே, 'இண்டியா' கூட்டணியை வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் தேர்தல் பிரசாரத்துக்கு சென்றார்.

