/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தாவரவியல் பூங்கா புல் தரையில் உரம் கலந்த மண்
/
தாவரவியல் பூங்கா புல் தரையில் உரம் கலந்த மண்
ADDED : ஏப் 08, 2024 11:40 PM

ஊட்டி;ஊட்டி தாவரவியல் பூங்காவை, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், அடுத்த மாதம், 17ம் தேதி துவங்கி, முதல் முதலாக, ஆறு நாட்கள் நடைபெற உள்ளது.
அதற்காக, பூங்காவில், 250 வகையான, 5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு, விழா நாட்களில் பூத்துக் குலுங்கும் வகையில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது.
தற்போது, வறட்சி நிலவுவதால், புல்தரை காய்ந்து பசுமையை இழந்து வருகிறது. இந்நிலையில், புல் தரையை சமன் செய்து, உரம் கலந்த மண் கொட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பூங்கா நிர்வாகம் கூறுகையில், 'இவ்வாறு, மண் கொட்டுவதால், கோடை சாரல் மழையில் புற்கள் செழித்து வளர்ந்து, சீசனுக்குள் பசுமையாக மாறும்,' என்றனர்.

