/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையில் ஓய்வெடுக்கும் எருமைகள்; வாகனங்களை இயக்க இடையூறு
/
சாலையில் ஓய்வெடுக்கும் எருமைகள்; வாகனங்களை இயக்க இடையூறு
சாலையில் ஓய்வெடுக்கும் எருமைகள்; வாகனங்களை இயக்க இடையூறு
சாலையில் ஓய்வெடுக்கும் எருமைகள்; வாகனங்களை இயக்க இடையூறு
ADDED : ஆக 20, 2024 10:08 PM
கூடலுார் : கூடலுார் இரும்புபாலம் அருகே, போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் ஓய்வெடுக்கும் வளர்ப்பு எருமைகளால் டிரைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கூடலுார் இரும்புபாலம் அருகே கோழிக்கோடு சாலையோரம் வளர்ப்பு எருமைகள் காலையில் மேய்ச்சலுக்கு வருகின்றன.
சிறிது நேரத்தில் சாலையில் படுத்து ஓய்வு எடுப்பதால், வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனை கால்நடை உரிமையாளர்கள்; போலீசார் கண்டு கொள்வதில்லை.
டிரைவர்கள் கூறுகையில், 'இச்சாலை, தமிழக, கேரளா, கர்நாடகாவை இணைக்கும் முக்கிய வழிதடமாகும்.
இப்பகுதியில் மேய்ச்சலுக்கு விடப்படும் எருமைகள், சாலையில் ஓய்வு எடுப்பதால், வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.