ADDED : ஆக 20, 2024 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்;அன்னுாரில் மனவளக்கலை யோகா பயிற்சி இன்று (20 ம் தேதி) துவங்குகிறது.
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி வடிவமைத்த, 'முழுமை நல வாழ்விற்கு, மனவள கலை யோகா' என்னும் அடிப்படை பயிற்சி வகுப்பு அன்னுாரில் இன்று (20ம் தேதி) முதல், 12 நாட்களுக்கு நடைபெறுகிறது. தினமும் காலை 10:30 மணி முதல் 12.30 மணி வரை யோகா பயிற்சி நடைபெறும். அன்னுார் அ.மு. காலனியில் உள்ள மனவளக்கலை மன்றத்தில், பயிற்சி நடைபெறும். இதில் எளிய முறை உடற்பயிற்சி, தியானம், காயகல்ப பயிற்சி, யோகா கற்பிக்கப்படும்.
'இப்பயிற்சி பெறுவதால், உடல் நலம், மன நலம் மேம்படும். நல்ல சிந்தனைகள் உருவாகும். மேலும் விவரங்களுக்கு 94424 56862 என்னும் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்,' என மனவளக்கலை மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.