ADDED : ஜூலை 17, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
ஊட்டி: ஊட்டி நகரில் கால்நடைகள் தொல்லை அதிகரித்து வருவதால், உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் அவதி அடைந்து வருகின்றனர்.
ஊட்டியில் தாவரவியல் பூங்கா, கமர்ஷியல் சாலை, கலெக்டர் அலுவலக சாலை, பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில், எருமை, குதிரை, மாடுகள் பகல் நேரத்தில் அதிகளவில் உலாவருவதால், வாகனங்கள் செல்லவும், உள்ளூர் மக்கள் நடமாடவும் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, இந்த பிரச்னைக்கு தீர்வு காண நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
