/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரி தொகுதியில் முருகன் போட்டி பா.ஜ.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
/
நீலகிரி தொகுதியில் முருகன் போட்டி பா.ஜ.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
நீலகிரி தொகுதியில் முருகன் போட்டி பா.ஜ.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
நீலகிரி தொகுதியில் முருகன் போட்டி பா.ஜ.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
UPDATED : மார் 22, 2024 12:52 PM
ADDED : மார் 22, 2024 12:52 AM
அன்னுார்:நீலகிரி தொகுதியில் மத்திய இணை அமைச்சர் முருகன் போட்டியிடுவதையடுத்து பா.ஜ., நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தமிழகத்தில் பா.ஜ., சார்பில், போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. நீலகிரி தொகுதியில் மத்திய இணை அமைச்சர் முருகன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானவுடன் எல்லப்பாளையம் பிரிவில் உள்ள பா.ஜ., மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஜெயபால், விவசாய அணி மாவட்ட தலைவர் விஜயகுமார், இளைஞரணி மாவட்ட தலைவர் அருண்குமார் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர். பிரதமர் மோடி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மற்றும் மத்திய இணை அமைச்சர் முருகனை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பினர்.
பா.ஜ., நிர்வாகிகள் கூறுகையில், 'மத்திய இணை அமைச்சர் முருகன் கடந்த ஓராண்டாகவே நீலகிரி தொகுதியில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கான முகாம்களை நடத்தி பல்லாயிரம் சாலையோர வியாபாரிகளுக்கு சிறுகடன்கள் பெற்று தந்துள்ளார். சிறு, குறு தொழில் செய்வோருக்கு முத்ரா திட்டத்தில் கடன் பெற்றுத் தரப்பட்டுள்ளது.
நீலகிரி தொகுதியில் மட்டும் 10,000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு உஜ்வாலா திட்டத்தில் இலவச சமையல் கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. முருகன் மேட்டுப்பாளையத்திலேயே வீடு எடுத்து தங்கி தொகுதி மக்களுக்காக பணியாற்றி வருகிறார். எனவே அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது,' என்று கூறி இனிப்பு வழங்கினர்.

