தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி முகாம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி முகாம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி முகாம்


ADDED : ஜூலை 08, 2026 09:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2026 09:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பந்தலுார்: பந்தலுார் தாசில்தார் அலுவலகத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி குறித்த பயிற்சி முகாம் நடந்தது.

தாசில்தார் துரைசாமி துவக்கி வைத்து பேசுகையில், ‘‘ நாட்டில், 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு, இரண்டு கட்டங்களாக நடக்க உள்ளது. அதில், வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் வசதி கணக்கெடுப்பும், தொடர்ந்து ஆக., மாதம் மக்கள் தொகை கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்பட உள்ளது. முதல் முறையாக டிஜிட்டல் முறையில் இந்த கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படும் நிலையில்,

‘கணக்கெடுப்பாளர்களின் சுய விபரங்கள் பதிவு செய்தல், புவிசார் குறியீடு பதிவு செய்தல், வீடுகளின் தரம், வசதிகள், குடிநீர், கழிவறை, வாகனங்கள்,’ உள்ளிட்ட, 33 வகையான விபரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். அதில், பணியாற்றும் ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கூட்டுறவு வங்கி, நகராட்சி, ஊராட்சி பணியாளர்கள் பொறுமையுடன் தகவல்களை பதிவு செய்ய வேண்டும்,’’ என்றார். தொடர்ந்து, பயிற்சியாளர்கள் ஆசிரியர்கள் கிருஷ்ணகுமார், நந்தகோபால் உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us