ADDED : ஜூலை 08, 2026 09:52 PM
அ நிறம் | அளவு
கோத்தகிரி: கோத்தகிரி நகராட்சியில், அனைத்து வீடுகளுக்கு தண்ணீர் வினியோகிக்க ஏதுவாக, சாலை ஓரத்தில் குழாய் பதிப்பதற்காக, சில மாதங்களுக்கு முன்பு, குழிகள் தோண்டப்பட்டன. பணிகள் நிறைவடைந்த நிலையில், குழிகள் மூடப்படாமல் உள்ளது. குறிப்பாக, நகராட்சி அலுவலகம் - மார்க்கெட் இடையே, நடைப் பாதையில் நாள்தோறும், மூன்று பள்ளிகளை சேர்ந்த, நூற்றுக்கணக்கான மாணவர்கள் நடந்து செல்கின்றனர். இங்கு, தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாததால், சாலையில் சென்று வர வேண்டிய நிலை உள்ளது.
எனவே, நகராட்சி நிர்வாகம், மழை தீவிரமடைவதற்கு முன்பு, குழியை சமன் செய்து, நடைபாதையில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமம் இல்லாமல் சென்றுவர நடவடிக்கை எடுப்பது அவசியம்.
