தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளர்கள் கோரிக்கை

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளர்கள் கோரிக்கை

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளர்கள் கோரிக்கை


ADDED : ஜூலை 28, 2026 05:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 28, 2026 05:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: நீலகிரி மாவட்ட, தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கலெக்டரிடம் அளித்துள்ள மனு:

நீலகிரி மாவட்டத்தில், இயற்கை இடர்பாடுகள், வன விலங்குகள் நடமாட்டம் உள்ளது. இங்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியினை காலை, மாலை நேரங்களில் மேற்கொள்வதில் மிகுந்த சிரமமும் பணியாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலும் உள்ளது.

கணக்கெடுப்பு காலத்தில் அரை நாள் தற்செயல் விடுப்பு, முழுமையாக, 10 நாட்கள் தற்செயல் விடுப்பு அல்லது வாரத்தில் மூன்று நாட்கள் முழுமையான கணக்கெடுப்பு பணி போன்ற தீர்வுகளில் ஏதேனும் ஒன்றுக்கு உரிய ஆணை வழங்கினால் கணக்கெடுப்பு மற்றும் கற்பித்தல் பணிகளில் பாதிப்பு ஏற்படாது. எனவே, இம்மாவட்டத்தின் சூழலை கருத்தில் கொண்டு உரிய ஆணைகள் பிறப்பிக்க தாங்கள் ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us