/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடியிருப்பு பகுதிகளில் துாய்மை பணி ஆயிரம் கிலோ குப்பை சேகரிப்பு
/
குடியிருப்பு பகுதிகளில் துாய்மை பணி ஆயிரம் கிலோ குப்பை சேகரிப்பு
குடியிருப்பு பகுதிகளில் துாய்மை பணி ஆயிரம் கிலோ குப்பை சேகரிப்பு
குடியிருப்பு பகுதிகளில் துாய்மை பணி ஆயிரம் கிலோ குப்பை சேகரிப்பு
ADDED : பிப் 25, 2025 10:09 PM

குன்னுார், ; குன்னுார் குடியிருப்போர் சங்கம், தன்னார்வலர்கள் இணைந்து மேற்கொள்ளும் புதிய துாய்மை பணி நிகழ்ச்சியில், முதற்கட்டமாக 'புரூக் லேண்ட்' பகுதியில், 1,000 கிலோ குப்பை அகற்றப்பட்டது.
குன்னுாரில், 'கிளீன் குன்னுார்' அமைப்பு, நகராட்சி ஒத்துழைப்புடன் பல்வேறு துாய்மை பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் அடுத்த கட்டமாக, குடியிருப்பு பகுதிகளில் துாய்மை பணிகளை மேற்கொள்ள, அந்தந்த பகுதிகளில் உள்ள குடியிருப்போர் சங்கம், தன்னார்வலர்கள் அமைப்பு, இளைஞர்கள் கிளப் ஆகியோருடன் இணைந்து துாய்மை பணிகளை மேற்கொள்வதுடன், விழிப்புணர்வும் ஏற்படுத்த முடிவு செய்துள்ளது.
இதன் முதற்கட்டமாக, புரூக் லேண்ட் குடியிருப்போர் சங்கம் சார்பில், புரூக்லேண்ட் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், துாய்மை பணி நடந்தது.
அதில், குன்னுார் நகராட்சி பணியாளர்கள் ஒத்துழைப்புடன் சாலையோர புதர்கள் அகற்றப்பட்டன.
புரூக் லேண்ட் குடியிருப்போர் சங்க நிர்வாகி ராதிகா ஹெக்டே தலைமையில், நகராட்சி பணியாளர்கள், கிளீன் குன்னுார் அமைப்பினர், சங்கத்தினர் சுற்றுப்புறத்தை துாய்மை செய்தனர்.
அதில், மொத்தம், 1,090 கிலோ குப்பை சேகரிக்கப்பட்டது. இவை, ஓட்டுப்பட்டறை மறுசுழற்சி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டன.
மேலும், கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து உள்ளூர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.