/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காலநிலை மாற்றம் சுற்றுலா மையங்கள் 'வெறிச்'
/
காலநிலை மாற்றம் சுற்றுலா மையங்கள் 'வெறிச்'
ADDED : ஆக 31, 2024 02:15 AM
ஊட்டி:ஊட்டியில் மழையுடன், குளிரான காலநிலை நிலவுவதால், பார்வையாளர்கள் இல்லாமல் முக்கிய சுற்றுலா மையங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
ஊட்டியில், கோடைவிழா நாட்கள் உட்பட, சாதாரண நாட்களில் கூட சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. வார விடுமுறை நாட்களில், கணிசமான சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பது வழக்கம்.
அடுத்த மாதம் இரண்டாவது சீசன் துவங்க உள்ள நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவை தயார் படுத்தும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த இரு நாட்களாக, பகல் நேரத்தில் ஓரளவு வெயில் அடித்தாலும், அதிகாலை மற்றும் மாலை நேரங்களில், அவ்வப்போது சாரல் மழையுடன், மேக மூட்டத்தில் குளிரான காலநிலை நிலவுகிறது. இதனால், கர்நாடகா, கேரள மாநிலங்களில் இருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உட்பட உள்ளூர் மக்களின் வருகை வெகுவாக குறைந்துள்ளது.
அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மற்றும் பைக்காரா உட்பட, ஊட்டியில் உள்ள முக்கிய சுற்றுலா மையங்களில் கூட்டம் குறைந்து, வெறிச்சோடி காணப்படுகிறது. இதே போல, குன்னுார், சிம்ஸ் பூங்கா, லேம்ஸ் ராக், கோத்தகிரி கோடநாடு காட்சி முனை மற்றும் கேத்தரின் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா மையங்களிலும், சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது.