/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வண்ணமயமான பழங்குடியினர் பள்ளி வளாகம்
/
வண்ணமயமான பழங்குடியினர் பள்ளி வளாகம்
ADDED : மே 02, 2024 11:44 PM

பந்தலுார்:பந்தலுார் அருகே பழங்குடியினர் பள்ளிகள் வண்ணமயமாக மாறி வருகின்றன.
கோவை மாவட்டத்தில் செயல்படும் துாரிகை அறக்கட்டளை, நீலகிரியில், பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் கிராமங்களை ஒட்டி செயல்படும் அரசு பள்ளிகளில், மாணவர்களின் வருகை- மற்றும் கல்வி மேம்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில், கடந்த, 2015 ஆம் ஆண்டு முதல் அரசு பள்ளிகளை பொலிவுபடுத்தும் பணியில், இதன் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, பந்தலுார் அருகே அம்பலமூலா பகுதியில், செயல்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளியில் வகுப்பறைகளை வண்ணமயமாக மாற்றி வருகின்றனர்.
தற்போது, பழங்குடியின மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து பல்வேறு தலைப்புகளில், ஓவியங்களை வரைந்து உள்ளனர்.
இதன் மூலம் பழங்குடியின மாணவர்களின் பள்ளி வருகையை அதிகரிக்கவும், அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த படங்களை பார்த்து பொது அறிவு மேம்படுத்தி கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
துாரிகை அறக்கட்டளை நிர்வாகி ரஞ்சித் கூறுகையில்,''இதே போல, பழங்குடியின மாணவர்கள் படிக்கும் பள்ளிகளை தேடிச் சென்று, மாணவர்களின் பள்ளி வருகையை அதிகரிக்க செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அவர்களுக்கு கல்வி மீதான ஆர்வம் அதிகரிக்க இது போன்ற சூழல் பயன்படும்,'' என்றனர்.