/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ராஜா வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய சுயேட்சை வேட்பாளர் புகார்
/
ராஜா வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய சுயேட்சை வேட்பாளர் புகார்
ராஜா வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய சுயேட்சை வேட்பாளர் புகார்
ராஜா வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய சுயேட்சை வேட்பாளர் புகார்
ADDED : மார் 29, 2024 12:21 AM

ஊட்டி;தி.மு.க., வேட்பாளர் ராஜா வேட்பு மனுவுக்கு, சுயேட்சை வேட்பாளர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி லோக்சபா தொகுதியில் நேற்று மாவட்ட தேர்தல் அதிகாரி அருணா தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டது.
அதில், பா.ஜ., வேட்பாளர் முருகன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயக்குமார் ஆகியோரது மனுகள் ஏற்றுகொள்ளப்பட்டது. பின், தி.மு.க., வேட்பாளர் ராஜா, வேட்பு மனு பரீசிலனைக்கு வந்தது.
அப்போது, சுயேட்சை வேட்பாளர் சதீஷ் என்பவர் கூறுகையில், ''ராஜா, தொடர்ந்து ஹிந்துக்களை பற்றி இழிவாக பேசி வருகிறார்.
தேர்தல் சமயத்தில் மட்டும் ஹிந்து சான்றிதழை பயன்படுத்தி போட்டியிடுகிறார். இவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்,'' எனக்கூறி தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்தார்.
அ.தி.மு.க., வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் வேட்பு மனுவில் சில மாற்றங்கள் இருந்ததால் அவரது வேட்பு மனுவும் நிறுத்தி வைக்கப்பட்டது. பின், நடந்த பரிசீலனையில் இருவரது மனுக்கள் ஏற்றுகொள்ளப்பட்டதாக, தேர்தல் அதிகாரி அருணா அறிவித்தார்.

