நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி;ஊட்டி ஐயப்பன் கோவிலில், நவகிரக கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நேற்று காலை, 11:30 மணி முதல் 12:20 மணி வரை நடந்தது.
அதனை தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். வரும் 26 ம் தேதி வரை நாள்தோறும், 12: 40 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஐயப்பன் பஜனை சபா செய்திருந்தது.

