/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொடரும் வனவிலங்கு பிரச்னை: கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
/
தொடரும் வனவிலங்கு பிரச்னை: கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
தொடரும் வனவிலங்கு பிரச்னை: கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
தொடரும் வனவிலங்கு பிரச்னை: கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 02, 2024 02:22 AM

பந்தலுார்:பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், இதுவரை யானைகள் தாக்கி, 78 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, இந்த பகுதியில், 50க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. யானைகளை அடர்ந்த காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை இல்லை. இதனால், பொதுமக்கள் பகல் நேரங்களிலும் வெளியில் நடமாட முடியாத நிலையில் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்க தலைவர் சிபி தலைமையில் சேரம்பாடி பஜாரில், கருப்பு உடை மற்றும் கொடிகளுடன் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. செயலாளர் பழனி வரவேற்றார்.
முதன்மை ஒருங்கிணைப்பாளர் ரவி, ஒருங்கிணைப்பாளர் மகாவிஷ்ணு முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து நடந்த விளக்க கூட்டத்தில், 'வனவிலங்குகள் பிரச்னையை கட்டுப்படுத்த வலியுறுத்தி, வனத்துறை அதிகாரிகளை சந்திக்க சென்றால் அலட்சியப்படுத்தி வருவதாகவும், இதே நிலை தொடர்ந்தால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்,' என, வலியுறுத்தப்பட்டது.
சேரங்கோடு ஊராட்சி மன்ற தலைவர் லில்லி, நிர்வாகி சந்திரசேகர் மற்றும் அனைத்து அரசியல் கட்சி, பொதுநல அமைப்புகள், வியாபாரிகள் மற்றும் ஓட்டுனர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.