/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோடநாடு வழக்கில் 4 பேருக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன்
/
கோடநாடு வழக்கில் 4 பேருக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன்
கோடநாடு வழக்கில் 4 பேருக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன்
கோடநாடு வழக்கில் 4 பேருக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன்
ADDED : ஜூலை 25, 2024 02:11 AM
ஊட்டி:கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நான்கு பேர், விசாரணைக்கு ஆஜராகுமாறு கோவை சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு ஊட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தீபு, உதயகுமார் ஆகியோர் இன்று, கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் வழங்கிஉள்ளனர்.
அதேபோல், ஜம்ஷீர் அலி, ஜித்தின் ஜாய் ஆகிய இருவரையும் வரும் 30ம் தேதி விசாரணைக்கு ஆஜராக கோவை சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த வழக்கில் தீபு 3 வது குற்றவாளி. அதேபோல, ஜம்ஷீர் அலி - 4, உதயகுமார் - 7, ஜித்தின் ஜாய் -10வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர்.