/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'சைபர் செக்யூரிட்டி' தகவல்கள்; கூட்டுறவு பணியாளர் பயிற்சி
/
'சைபர் செக்யூரிட்டி' தகவல்கள்; கூட்டுறவு பணியாளர் பயிற்சி
'சைபர் செக்யூரிட்டி' தகவல்கள்; கூட்டுறவு பணியாளர் பயிற்சி
'சைபர் செக்யூரிட்டி' தகவல்கள்; கூட்டுறவு பணியாளர் பயிற்சி
ADDED : அக் 29, 2024 08:49 PM
கோத்தகிரி : நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு தலைமையகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, சென்னை மாநில கூட்டுறவு பணியாளர்கள் பயிற்சி நிலையம் சார்பில், டிஜிட்டல் பேங்க்கிங் மற்றும் சைபர் செக்யூரிட்டி பயிற்சி அளிக்கப்பட்டது.
இரண்டு நாட்கள் நடந்த பயிற்சியில் பங்கேற்ற பணியாளர்களுக்கு, நீலகிரி மண்டல இணை பதிவாளர் தயாளன், துணை பதிவாளர் அய்யனார் ஆகியோர், 'பயிற்சியை சிறந்த முறையில் பயின்று, வங்கி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்,' என, அறிவுறுத்தினர்.
பயிற்ச்சியாளர்கள் அருளாளன் மற்றும் சத்தியசாயி ஆகியோர் பயிற்சி அளித்தனர். அதில், உதவி பொது மேலாளர் சுரேஷ், மேலாளர்கள் ரவி மற்றும் அனில் உட்பட, 35 வங்கி பணியாளர்கள் பங்கேற்றனர்.