ADDED : ஆக 14, 2024 12:28 AM
அ நிறம் | அளவு
குன்னுார்:அப்பர் குன்னுார் போலீஸ் ஸ்டேஷன் சார்பில்,போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இதற்காக பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரி என்.சி.சி., பிரிவினர் உட்பட மாணவியர் பேரணிக்கு அழைத்து வரப்பட்டனர். பேரணி பஸ் ஸ்டாண்ட் தீயணைப்பு நிலைய வளாகத்தில் நிறைவு பெற்ற போது, மாணவியருக்கு, ஜூஸ் பாக்கெட் மற்றும் பிஸ்கட்கள் வழங்கப்பட்டன.
இதன் பிளாஸ்டிக் கவர் மற்றும் ஜூஸ் கவர்கள் ஆங்காங்கே வீசப்பட்டதுடன், முறையாக அகற்றப்படாமல் அதே இடங்களில் விட்டு செல்லப்பட்டன. எனவே, இனி வரும் நாட்களி குப்பைகளை உரிய முறையில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
