/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தோட்டக்கலை பண்ணையில் சேதமான நாற்றுகள்
/
தோட்டக்கலை பண்ணையில் சேதமான நாற்றுகள்
ADDED : ஜூலை 19, 2024 02:38 AM

கூடலுார்:கூடலுார், பொன்னுார் தோட்டக்கலை பண்ணையில் நுழைந்த காட்டு யானைகள், நர்சரியில் இருந்த நாற்றுகளை சேதப்படுத்தின.
கூடலுார், நாடுகாணி அருகே உள்ள, பொன்னுார் தோட்டக்கலை பண்ணையை ஒட்டிய புல்வெளிகளில் காட்டு யானை கூட்டம் முகாமிட்டு மேய்ச்சலில் ஈடுபட்டு வருகிறது.
நேற்று முன்தினம், இரவு காட்டு யானைகள் தோட்டக்கலை பண்ணையில் நுழைந்து, நர்சரியை சேதப்படுத்தி அங்கு பயிரிட்டு இருந்த காபி, குறுமிளகு, கிராம்பு, சில்வர் ஓக் நாற்றுகளை மிதித்து சேதம் செய்து சென்றுள்ளது.
தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பிரசன்னகுமார், தோட்டக்கலை துறை அலுவலர் விஜயராஜ், உதவி தோட்ட கலை அலுவலர் அரவிந்த் சேதமடைந்த நாற்றுகளை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, தொழிலாளர்கள் அவைகளை சீரமைக்கும் பணியில் மேற்கொண்டனர்.
தொழிலாளர்கள் கூறுகையில், 'இப்பகுதியில் நுழையும் காட்டு யானைகள், நர்சரியை சேதப்படுத்தி, நாற்றுகளை மிதித்து சேதம் செய்து வருகிறது. இதனை தடுக்க, நர்சரி பகுதியை சுற்றி அகழி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.