/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தாழ்வாக தொங்கி செல்லும் மின் கம்பிகளால் அபாயம்
/
தாழ்வாக தொங்கி செல்லும் மின் கம்பிகளால் அபாயம்
ADDED : ஆக 21, 2024 11:31 PM

கோத்தகிரி : கோத்தகிரி மார்க்கெட் திடலில், தாழ்வாக தொங்கி செல்லும் மின் கம்பிகளால், 'ஷாக்' அபாயம் அதிகரித்துள்ளது.
கோத்தகிரி மார்க்கெட் திடலில், 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இங்குள்ள அரங்கில், அரசியல் கட்சி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக கூட்டங்கள் நடத்தப்படுகிறது. கூட்டங்களில் மக்கள் கூடுவது வழக்கம். மார்க்கெட் திடலில் உள்ள மின்கம்பத்தில் இருந்து, தாழ்வான பகுதியில் உள்ள தண்ணீர் 'பம்ப்பிங்' அறைக்கு, மிக தாழ்வாக மின் கம்பிகள் தொங்கியவாறு செல்கிறது.
இங்கு ஆக்கிரமித்துள்ள காட்டு செடிகள் கம்பிகளில் படர்ந்து செல்வதால், 'ஷாக்' அபாயம் அதிகரித்துள்ளது.
எனவே, அசம்பாவிதம் நடப்பதற்கு முன் செடிகளை அகற்றுவதுடன், மின் கம்பத்தை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.