ADDED : ஜூலை 23, 2026 05:32 PM
பந்தலுார்: நெல்லியாளம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, போராட்டம் நடத்த வியாபாரிகள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பந்தலுார் வணிகர் சங்கத்தின், வருடாந்திர பொதுக்குழு கூட்டம், தனியார் மண்டபத்தில் நடந்தது. பாலசுப்பிரமணியம் வரவேற்றார். தலைவர் அஷ்ரப் தலைமை வகித்தார்.
மூத்த நிர்வாகிகளை, சங்க செயலாளர் ஆண்டனி, பொருளாளர் செல்வகுமார் ஆகியோர் கவுரவித்தனர். தொடர்ந்து, அரசு பொது தேர்வுகளில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
கூட்டத்தில்,‘பந்தலூர் பஜாரின் வளர்ச்சி பணிகள் குறித்து நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகத்தை, கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடத்துவது. பஜாரில் கால்வாயுடன் கூடிய நடைபாதை அமைக்க கோருவது; தெருவிளக்குகளை சீரமைப்பதுடன், பந்தலுாரில் பொது மைதானத்தை சீரமைத்து, ஸ்டேடியம் அமைக்க வேண்டும். அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் மற்றும் வசதிகளை ஏற்படுத்த கோருவது; பார்க்கிங் வசதி ஏற்படுத்துவதுடன், வார சந்தை ஏற்படுத்த வேண்டும்,’ என்பன உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். துணை தலைவர் பிரவீன் நன்றி கூறினார்.
