/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அறநிலையத்துறை இடம் குத்தகைக்கு எடுக்க முடிவு மார்க்கெட் தற்காலிக கடைகள் அமைக்க ஏற்பாடு
/
அறநிலையத்துறை இடம் குத்தகைக்கு எடுக்க முடிவு மார்க்கெட் தற்காலிக கடைகள் அமைக்க ஏற்பாடு
அறநிலையத்துறை இடம் குத்தகைக்கு எடுக்க முடிவு மார்க்கெட் தற்காலிக கடைகள் அமைக்க ஏற்பாடு
அறநிலையத்துறை இடம் குத்தகைக்கு எடுக்க முடிவு மார்க்கெட் தற்காலிக கடைகள் அமைக்க ஏற்பாடு
ADDED : மார் 02, 2025 11:55 PM
குன்னுார்,; குன்னுாரில், இந்து அறநிலையத்துறை இடத்தை, ஓராண்டிற்கு குத்தகைக்கு எடுத்து, மார்க்கெட் தற்காலிக கடைகள் அமைக்க நகராட்சியில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
குன்னுார் நகராட்சியின் கட்டுப்பாட்டில், 800க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடைகளுக்கு பல ஆண்டுகளாக வாடகை பிரச்னை நிலவிய நிலையில், கடந்த சட்டசபை தேர்தலில், இதற்கு தீர்வு காண்பதாக, தி.மு.க., துண்டு பிரசுரம் வழங்கியது. தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தீர்வு காணாமல், வாடகை உயர்வு மட்டுமின்றி, முந்தைய ஆண்டுகளின் நிலுவை தொகையையும் நிர்ணயித்து கட்டாயம் வசூல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், மார்க்கெட் கடைகளை இடித்துவிட்டு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நகர்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், 41.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, கடந்த ஆண்டு செப்., 30ல் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.
அதில், புதிதாக, 678 கடைகள், 158 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தம் மற்றும், 158 இருசக்கர வாகன நிறுத்தத்துடன், தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்த திட்ட பணியை செயல்படுத்த, நவ., 6ல், ஒப்பந்ததாரருக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டது. கடந்த, 20ல் பூமி பூஜை போடப்பட்டது. புதியதாக கடைகள் அமைக்க பழைய கடைகளை இடித்து அப்புறப்படுத்த நகராட்சி முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், நகராட்சி நிர்வாகங்களின் மண்டல இயக்குனர் தலைமையில், கடந்த, 24ல் நடந்த வியாபாரிகளுடனான கலந்தாய்வு கூட்டத்தில், திட்டத்தை மறுபரிசீலனை செய்ய அனைவரும் வலியுறுத்தினர்.
இந்நிலையில், 'மார்க்கெட் அருகில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை காலியிடத்தில், தற்காலிக கடைகள் அமைத்து கொடுத்தால், தங்களது வியாபாரம் பாதிக்காது,' என, வலியுறுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து, 'குறிப்பிட்ட இடத்தை, ஓராண்டிற்கு குத்தகை அடிப்படையில் நகராட்சிக்கு வழங்குமாறும், நகராட்சி நிர்வாக இயக்குனர் மூலம் இந்து சமய அறநிலையத்துறையிடம் கோரவும்,' நகரமன்றத்தின் அனுமதிக்கு முன் வைக்கப்பட்டது.
அதில், 'நகராட்சி மார்க்கெட் பணி துவங்க வேண்டியதன் அவசர அவசியம் கருதி, மன்றம் அனுமதி வழங்கலாம்,' என, தீர்மானிக்கப்பட்டுள்ளது.