/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேதமான பூங்கா மைதானத்தை பராமரிக்க முடிவு
/
சேதமான பூங்கா மைதானத்தை பராமரிக்க முடிவு
ADDED : ஏப் 19, 2024 10:56 PM
ஊட்டி:ஊட்டி தாவரவியல் பூங்கா புல்தரை மைதானம் சுற்றுலா பயணிகளால் சேதம் அடைந்ததால், மீண்டும் தயார் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள பல்வேறு வகையான மலர்களை பார்வையிடவும், அங்குள்ள பிரதான புல்தரை மைதானத்தில் அமர்ந்து ஓய்வெடுக்கவும், ஆடி, பாடி மகிழவும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர்.
பூங்காவில் அடுத்த மாதம் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மலர்கள் பராமரிக்கும் பணி துரித கதியில் நடந்து வருகிறது. சமவெளிபகுதியில் சுட்டெரிக்கும் வெயிலாலும், கேரளா, கர்நாடகா சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால்,கடந்த ஒரு வாரத்தில், 70 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
அங்குள்ள பிரதான புல்தரை மைதானத்தில் இதமான காலநிலையை ரசித்தவாறு சுற்றுலா பயணிகள் நடனமாடி மகிழ்ந்தனர். அதிகளவிலான சுற்றுலா பயணிகள் புல்தரை மைதானத்தை பயன்படுத்தியதால் புற்கள் சேதம் அடைந்துள்ளது. இதனால், மைதானத்தை சீசனுக்கு தயார்படுத்த, புல்தரை மைதானத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து, பராமரிப்பு பணி மேற்கொள்ள பூங்கா நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

