/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலை துாள் வரத்து குறைவு: சராசரி விலை 'கிடுகிடு' உயர்வு
/
தேயிலை துாள் வரத்து குறைவு: சராசரி விலை 'கிடுகிடு' உயர்வு
தேயிலை துாள் வரத்து குறைவு: சராசரி விலை 'கிடுகிடு' உயர்வு
தேயிலை துாள் வரத்து குறைவு: சராசரி விலை 'கிடுகிடு' உயர்வு
ADDED : ஜூன் 04, 2024 12:13 AM

குன்னுார்;நீலகிரியில் தேயிலை ஏலத்தில் வரத்து குறைந்த நிலையில், 97 சதவீதம் விற்பனையாகியதுடன், முதன் முறையாக சராசரி விலை, 111 ரூபாய் என உயர்ந்தது.
குன்னுார் தேயிலை ஏல மையத்தில் நடந்த, 22வது ஏலத்தில், '6.46 லட்சம் கிலோ இலை ரகம், 2.42 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 8.88 லட்சம் கிலோ தேயிலை துாள் ஏலத்திற்கு வந்தது.
'6.31 லட்சம் கிலோ இலை ரகம், 2.34 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, 8.65 லட்சம் கிலோ தேயிலை துாள் விற்றது. 9.64 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.
சராசரி விலை 'கிடுகிடு'வென உயர்ந்து, நடப்பாண்டு முதன் முறையாக கிலோவுக்கு, 111.44 ரூபாயாக இருந்தது; ஒரே வாரத்தில் இதுவரை இல்லாத வகையில் கிலோவுக்கு, 6 ரூபாய் வரை ஏற்றம் கண்டது.
கடந்த ஏலத்தை விட இந்த ஏலத்தில் தேயிலை துாள் வரத்து குறைந்தது. எனினும், இந்த வாரம் தேயிலை வரத்தில், 97.38 சதவீதம் தேயிலை துாள் விற்றது. இதுவரை இல்லாத வகையில், அனைத்து தேயிலை துாளுக்கும் கிலோ, 100 ரூபாய்க்கும் மேல் விலை கிடைத்துள்ளது. இதனால், பசுந்தேயிலைக்கு விலையில் ஏற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.