/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழுதடைந்த வாட்டர் பில்டர்; பொதுமக்கள் பரிதவிப்பு
/
பழுதடைந்த வாட்டர் பில்டர்; பொதுமக்கள் பரிதவிப்பு
ADDED : ஏப் 26, 2024 01:43 AM

பந்தலுார்;பந்தலுார் நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக, 'வாட்டர் பில்டர்' பொருத்தப்பட்டது. பொதுமக்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் தங்கள் தண்ணீர் தாகத்திற்கு இதனை பயன்படுத்தி வந்தனர்.
ஆனால், இந்த வாட்டர் பில்டர் பழுதடைந்து பல மாதங்கள் கடந்தும், இதனை சீரமைத்து குடிநீர் வினியோகம் செய்ய நகராட்சி நிர்வாகம் முன் வரவில்லை.
தற்போது, கோடை சீசன் வாட்டி வதைக்கும் நிலையில், நகராட்சி அலுவலகத்திற்கு நடந்து செல்லும் பொதுமக்கள், தாகத்திற்கு தண்ணீர் குடிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும், அலுவலகத்திற்கு வரும் மக்கள் உட்காருவதற்கு அலுவலக வளாக முன் பகுதியில் போடப்பட்டிருந்த இருக்கைகளும் அகற்றப்பட்டு உள்ளது. இதனால், தாகத்திற்கு தண்ணீர், உட்காருவதற்கு இருக்கை இல்லாமல் நகராட்சிக்கு வரும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

