/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'டிஜிட்டல் சர்வே' பணிக்கு உரிய தொகை வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்
/
'டிஜிட்டல் சர்வே' பணிக்கு உரிய தொகை வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்
'டிஜிட்டல் சர்வே' பணிக்கு உரிய தொகை வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்
'டிஜிட்டல் சர்வே' பணிக்கு உரிய தொகை வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 11, 2024 03:05 AM
ஊட்டி:ஊட்டி தாலுகா அலுவலகம் முன், 'டிஜிட்டல் சர்வே பணிக்கு உரிய தொகையை வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் சாம்சன் கூறுகையில்,'' தமிழக உயர் அதிகாரிகள் ஆலோசனைக்கு இணங்க, மாநிலம் முழுவதும் டிஜிட்டல் முறையில் பயிர்கள் சர்வே பணி கடந்த மாதம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. டிஜிட்டல் முறையில் பயிர்கள் சர்வே பணிக்கு மற்ற மாநிலங்களைப் போல கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். டிஜிட்டல் முறையில் பயிர்கள் சர்வே பணிக்கு உரிய தொகையை வழங்க வேண்டும். இந்த பணிக்கு பயன்படுத்தப்படும் மொபைல் செயலியில் உள்ள பல்வேறு குறைகளை களைய வேண்டும். ஏற்கனவே பணிச்சுமை அதிகமாக இருக்கும் போது இது கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்துகிறது. இதற்கு சரியான தீர்வு காணாவிட்டால் டிஜிட்டல் சர்வே பணிகளில் ஈடுபட மாட்டோம்,'' என்றார்
மேலும், குன்னுார், கோத்தகிரி, மஞ்சூர், கூடலுார், பந்தலுார் பகுதிகளின் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.