/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புதிய குற்றவியல் சட்டம் திரும்ப பெற ஆர்ப்பாட்டம்
/
புதிய குற்றவியல் சட்டம் திரும்ப பெற ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 06, 2024 01:22 AM

ஊட்டி:மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, ஊட்டியில் தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஊட்டி ஏ.டி.சி., திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தி.மு.க. வக்கீல் சங்க மாவட்ட தலைவர் சந்திரபோஸ் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் சிவசுப்ரமணியம் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், 'மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள மூன்று குற்றவியல் சட்டத்தை கண்டித்தும், இந்த சட்டத்தை திரும்பபெற வேண்டும்' என, கோஷம் எழுப்பப்பட்டது. மக்கள் சட்ட மைய நிறுவனர் வக்கீல் விஜயன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
சங்க மாவட்ட துணைத் தலைவர் குயிலரசன், துணை அமைப்பாளர்கள் மணிக்குமார், ரகு, கீர்த்திகா, செந்தில் குமார், ஸ்ரீ ஜோஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.