/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரூ. 4.51 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள்; மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைப்பு
/
ரூ. 4.51 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள்; மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைப்பு
ரூ. 4.51 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள்; மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைப்பு
ரூ. 4.51 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள்; மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைப்பு
ADDED : பிப் 21, 2025 10:45 PM
கோத்தகிரி; நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், 4.51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மக்கள் பயன்பாட்டிற்காக, எம்.பி., ராஜா திறந்து வைத்தார்.
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், நடுவட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அட்டவளை கிராமத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 8.11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேலன் பொருள் சேமிப்பு கிடங்கு, கொணவக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட, முல்லை நகர் பகுதியில், 9.90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தானியங்கி கிடங்கு திறக்கப்பட்டது.
இதே போல, ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட சேரிங்கிராஸ் பகுதியில், எம்.பி., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடம்; ஊட்டி ஊராட்சி ஒன்றியம், தும்மனட்டி ஊராட்சி, தும்மனாடா பகுதியில், 15வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ், 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடம்; மடித்தொரை பகுதியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், 14.85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை திறக்கப்பட்டது. மேலும், 'சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட புஞ்சங்கொல்லி, கொளப்பள்ளி பகுதியில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ், தலா, 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சமுதாய கூடம்; அய்யன் கொல்லியில், 19.25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழங்குடியின விற்பனை அங்காடி மற்றும் பயனியன் நிழற்குடை, தேவர்சோலை ஊராட்சிக்கு உட்பட்ட செம்பங்கொல்லி பகுதியில், 3.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை,' என, மொத்தம், 4.51 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சி பணிகள் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.