/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோவில் திருவிழாவில் பறவை காவடி; பால்குடம் ஊர்வலம் நடத்திய பக்தர்கள்

ADDED : மார் 25, 2024 12:20 AM

கூடலுார்;கூடலுார் இரண்டாவது மைல் முத்துமாரியம்மன் கோவில், 42ம் ஆண்டு தேர் திருவிழா கடந்த 22ம் தேதி காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
தொடர்ந்து, சிவன் வழிபாடு, சக்தி வழிபாடு, முருகன் வழிபாடு, நவ கிரக வழிபாடு நிகழ்ச்சிகள் நடந்தது. காலை 9:00 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சியும்; இரவு 9:00 மணிக்கு வேடன்வயல் ஆற்றங்கரையிலிருந்து அம்மனை கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சியும் நடந்தது.
நேற்று முன்தினம், காலை சிறப்பு பூஜைகளும், மதியம், 1:00 மணிக்கு, வேடன்வயல ஆற்றங் கரையிலிருந்து பறவை காவடி, பால்குடம் ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தில் பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அழகு குத்தி பங்கேற்றனர். மாலை, 5:00 மணிக்கு மாவிளக்கு விஜயம் தொடர்ந்து இரவு திருத்தேர் ஊர்வலமும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
நேற்று காலை, 11:00 மணிக்கு கரகம் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.