/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொண்டர்களிடம் தனபால் உருக்கம்; வெற்றி பெற உதவுங்கள் வெற்றி பெற உதவுங்கள்

ADDED : மார் 28, 2024 05:30 AM
அன்னூர் : ''என் மகனை வெற்றி பெறச் செய்யுங்கள்,''என அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் சபாநாயகர் தனபால் உருக்கமாக பேசினார்.
நீலகிரி லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக, முன்னாள் சபாநாயகரும், ஏழாவது முறையாக எம்.எல்.ஏ.,வாக பதவி வகித்து வரும் அவிநாசி எம்.எல்.ஏ.,வுமான தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்.
கோவை மாவட்டம், அன்னூரில், அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தனியார் மண்டபத்தில் நடந்தது. பல மாதங்களுக்கு பிறகு எம்.எல்.ஏ., தனபால் அன்னூர் வந்தார்.
நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசுகையில்,உடல்நல குறைவு காரணமாக கடந்த ஓராண்டாக வர முடியவில்லை. இனி வருகிறேன். எனது மகனை எப்படியாவது வெற்றி பெறச் செய்யுங்கள். முழுமையாக பிரசாரம் செய்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு ஒத்துழைப்பு தாருங்கள், என உருக்கமாக பேசினார்.