/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு
/
குன்னுாரில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு
ADDED : மார் 02, 2025 11:57 PM
குன்னுார்; குன்னுார் சி.எம்.எஸ்., விடுதியில் தீயணைப்பு துறை சார்பில், பேரிடர் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நீலகிரி மாவட்டத்தில், பேரிடர் பாதிப்புகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பான விழிப்புணர்வு அனைவரிடமும் ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதன் பேரில், குன்னுார் தீயணைப்பு துறை சார்பில், சி.எம்.எஸ்., மாணவர்கள் விடுதியில் பேரிடர் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிலைய அலுவலர் குமார் தலைமையில், முன்னணி தீயணைப்பாளர் சுப்ரமணியம், பேரிடர் மேலாண்மை, தீத்தடுப்பு முறைகள் குறித்து பேசினர். தீத்தடுப்பு குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர் மாதன் உட்பட பலர் பங்கேற்று ஒத்திகையில் ஈடுபட்டனர்.