/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பேரிடர் மீட்பு ஒத்திகை; குன்னுாரில் விழிப்புணர்வு
/
பேரிடர் மீட்பு ஒத்திகை; குன்னுாரில் விழிப்புணர்வு
ADDED : ஜூலை 03, 2024 09:12 PM

குன்னுார் : குன்னுாரில் தீயணைப்பு துறை மற்றும் வருவாய் துறை சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
நீலகிரி மாவட்டத்தில் மழையினால் பல்வேறு இடங்களிலும் நிலச்சரிவு, மண் சரிவு உட்பட பேரிடர் காலங்களில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது தொடர்பாக, தீயணைப்பு துறை மற்றும் வருவாய்துறையினர் இணைந்து பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர். குன்னுார் பஸ் ஸ்டாண்ட் மற்றும் தீயணைப்பு நிலைய பகுதிகளில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கயிறு கட்டி அதில் பாதிக்கப்பட்டவர்களை தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றி கொண்டு வரும் வகையில், ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர். நிகழ்ச்சிக்கு குன்னுார் ஆர்.டி.ஓ., சதீஷ்குமார் தலைமை வகித்தார்.
பேரிடர் மீட்பு குறித்த தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் விளக்கமளித்தார். தாசில்தார் கனி சுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.