/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மீண்டும் வழங்கப்படும் ராகி தரமில்லாமல் உள்ளதால் அதிருப்தி
/
மீண்டும் வழங்கப்படும் ராகி தரமில்லாமல் உள்ளதால் அதிருப்தி
மீண்டும் வழங்கப்படும் ராகி தரமில்லாமல் உள்ளதால் அதிருப்தி
மீண்டும் வழங்கப்படும் ராகி தரமில்லாமல் உள்ளதால் அதிருப்தி
ADDED : ஜூன் 11, 2024 12:19 AM
குன்னுார்;தமிழகத்தில், நீலகிரி, தர்மபுரி மாவட்ட ரேஷன் கடைகளில், இலவச அரிசிக்கு பதில் இலவசமாக ஒரு குடும்பத்துக்கு, 2 கிலோ கேழ்வரகு வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு மே மாதம், 3ம் தேதி அரசு துவக்கியது.
'தர்மபுரிக்கு, 9.20 லட்சம் கிலோ, நீலகிரியில், 4.40 லட்சம் கிலோ தேவை,' என, அறிவித்து, பெங்களூருவில் இருந்து கொள்முதல் செய்து வழங்கப்பட்டு வருகிறது. தரமற்ற கேழ்வரகு வழங்குவதால் மக்கள் வாங்க தயக்கம் காட்டினர்.
எனினும், மக்களை கட்டாயம் வாங்க வைக்க, மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரிகள் கடை ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர்.
தொடர்ந்து, ஆய்வு செய்து சுத்தம் செய்து வழங்க தரக்கட்டுப்பாடு குழுவினர் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. கடந்த சில மாதங்களாக ராகி வழங்கப்படாத நிலையில், தற்போது மீண்டும் ரேஷன் கடைகளில் வழங்கும் கேழ்வரகு தரம் இல்லாமல் உள்ளது.
லஞ்சம் இல்லாத நீலகிரி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறுகையில்,''ராகி என அழைக்கும் கேழ்வரகு தரமில்லாமல் வழங்கப்படுவது பயனற்றதாக உள்ளது. தரமாக வழங்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
வட்ட வழங்கல் அதிகாரிகள் கூறுகையில்,'இது தொடர்பாக ஏற்கனவே அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவு வந்ததும் தரக்கட்டுப்பாடு குழுவினர் நடவடிக்கை எடுத்து தீர்வு காண்பர்,' என்றனர்