/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வாக்காளர்களுக்கு தகவல் சீட்டு வழங்கல்
/
வாக்காளர்களுக்கு தகவல் சீட்டு வழங்கல்
ADDED : ஏப் 02, 2024 10:37 PM
ஊட்டி;ஊட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, கீழ் லட்சுமிநாராயணபுரம் பகுதியில், லோக்சபா தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்பட்டது.
மாநிலத்தில் ஏப்., 19ல் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், வீடு, வீடாக சென்று ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களால், வாக்காளர்களுக்கு, தகவல் சீட்டுகள் வழங்கும் பணி நடந்து வருகிறது. அதன்படி ஊட்டி நகராட்சிக்குட்பட்ட கீழ் லட்சுமி நாராயணபுரம் பகுதியில் நடந்த பணியினை, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பார்வையிட்டனர்.
மேலும், நீலகிரியில், 100 சதவீத வாக்குப்பதிவினை எய்திடும் வகையில், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன.

