/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாவட்ட வன மகோற்சவம் புகைப்பட கண்காட்சி
/
மாவட்ட வன மகோற்சவம் புகைப்பட கண்காட்சி
ADDED : ஜூலை 05, 2024 01:29 AM
பாலக்காடு;மாவட்ட வன மகோற்சவத்தின் ஒரு பகுதியாக அமைத்த புகைப்பட கண்காட்சி மாணவர்கள் மனதை வெகுவாக கவர்ந்தது.
கேரள மாநில வனத்துறையின் சமூக வனவியல் துறை சார்பில் 'வன மகோற்சவம்' என்ற பெயரில், மாநிலம் முழுவதும் நடத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
இதன் ஒரு பகுதியாக, பாலக்காடு பி.எம்.ஜி., அரசு மேல்நிலைப்பள்ளியில் 'கானனசாய' என்ற பெயரில் புகைப்பட கண்காட்சி துவங்கியது.
புகைப்பட கண்காட்சியை நகராட்சி தலைவர் பிரமீளா துவக்கி வைத்தார். மாவட்ட உதவி வன பாதுகாவலர் அனீஷ் தலைமை வகித்தார்.
10க்கும் மேற்பட்ட புகைப்படக் கலைஞர்களின், 250 புகைப்படங்கள் கண்காட்சியில் இடம் பிடித்துள்ளன.
புகைப்படங்கள் அனைத்தும் வனம், சுற்றுச்சூழல், வனவிலங்குகள் ஆகிய தலைப்புகளை மையமாக கொண்டவை.சக்காந்தரை அருகே உள்ள தனியார் மேல்நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் அஸ்வஜித் எடுத்த மலை அணில், தும்பி, நீலகிரி சிரிப்பான், பெரிய குயில்கீச்சான், சிறுதேன்கிளி ஆகிய புகைப்படங்கள் கண்காட்சியை காண வந்தவர்களை வெகுவாக கவர்ந்தன.