/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கரு கலைப்பு மாத்திரை பரிந்துரைத்த டாக்டர் கைது
/
கரு கலைப்பு மாத்திரை பரிந்துரைத்த டாக்டர் கைது
ADDED : ஏப் 07, 2024 11:21 PM

கூடலுார் : நீலகிரி மாவட்டம், கூடலுார் அருகே நண்பருடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக, 17 வயது சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். தகவலின்படி, கூடலுார் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில், அந்த சிறுமிக்கு, கூடலுாரில் கிளினிக் நடத்தி வரும் டாக்டர் நரேந்திரபாபு, கரு கலைப்பு மாத்திரையை பரிந்துரை செய்துள்ளார். அதை தனியார் மருந்தகத்தில் விற்பனை செய்துள்ளனர்.
இது குறித்த புகாரை தொடர்ந்து, நீலகிரி மாவட்ட மருத்துவ ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் பரமேஸ்வரி தலைமையிலான குழுவினர், தனியார் மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் புகார் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அதிகாரிகள் கடைக்கு, 'சீல்' வைத்தனர்.
அதிகாரிகளின் புகாரையடுத்து, டாக்டர் நரேந்திர பாபுவை கூடலுார் போலீசார் நேற்று கைது செய்தனர்.

