/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போதை ஒழிப்பு விழிப்புணர்வு; குன்னுாரில் கோல போட்டி
/
போதை ஒழிப்பு விழிப்புணர்வு; குன்னுாரில் கோல போட்டி
போதை ஒழிப்பு விழிப்புணர்வு; குன்னுாரில் கோல போட்டி
போதை ஒழிப்பு விழிப்புணர்வு; குன்னுாரில் கோல போட்டி
ADDED : பிப் 21, 2025 10:42 PM

குன்னுார்; குன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி, கோலபோட்டி நடந்தது.
நீலகிரி மாவட்ட மகளிர் திட்டம் சார்பில், குன்னுார் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மகளிர் குழு உறுப்பினர்களுக்காக நடந்த, கோல போட்டியில், போதை ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான கோலங்களிட்டு, மகளிர் குழு உறுப்பினர்கள் அசத்தினர்.
குன்னுார் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்சங்கர், மகளிர் திட்ட கணக்கர் ரமேஷ் முன்னிலை வகித்து, சிறந்த கோலங்களை தேர்வு செய்தனர்.
இதில், முதலிடத்தை உபதலை; இரண்டாம் இடத்தை அதிகரட்டி, உலிக்கல்; மூன்றாம் இடத்தை மேலுார் மகளிர் குழு உறுப்பினர்கள் பிடித்தனர். விரைவில், ஊட்டியில் நடக்க உள்ள மாவட்ட அளவிலான போட்டிகளில் இந்த குழுவினர் பங்கேற்க உள்ளனர்.