/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இ -பாஸ் சோதனை மையம் பந்தல் இடிந்து விழும் அபாயம்
/
இ -பாஸ் சோதனை மையம் பந்தல் இடிந்து விழும் அபாயம்
ADDED : ஜூலை 03, 2024 09:16 PM
குன்னுார் : குன்னுார்- மேட்டுப்பாளையம் மலைபாதை கல்லார் சோதனை சாவடியில் இ--பாஸ் சோதனைக்காக அமைக்கப்பட்ட பந்தல் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.
ஊட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் ஆகிய சுற்றுலா ஸ்தலங்களுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு இ--பாஸ் நடைமுறைபடுத்த ஐகோர்ட் உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து, கடந்த மே மாதம் முதல், இ--பாஸ் பெற்ற சுற்றுலா வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த மாதம், 30ம் தேதியுடன் இ-பாஸ் நடைமுறை கைவிடப்படும் என எதிர்பார்த்த நிலையில்,' செப்., மாதம் இறுதி வரை இ--பாஸ் நடைமுறை தொடரும்,' என, மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
இந்நிலையில், கடந்த மே மாதம் இங்கு அமைக்கப்பட்ட பந்தல் தற்போது இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரிந்தும் யாரும் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
பயணிகள் கூறுகையில், 'இங்குள்ள பந்தல் இடித்து விழுந்து பாதிப்பு ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.