ADDED : ஜூன் 22, 2024 12:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்:குன்னுார் மேலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.
விசு கல்வி மற்றும் பொதுநல அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவுக்கு, குன்னுார் வட்டார கல்வி அலுவலர்கள் யசோதா, திருமூர்த்தி சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
ஊர் தலைவர் அர்ஜுணன் தலைமை வகித்தார். தலைமையாசிரியை பிரேமா வரவேற்றார்.
விசு கல்வி மற்றும் பொதுநல அறக்கட்டளை நிறுவன தலைவர் கைகாட்டி சுப்ரமணி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள் வழங்கினார்.