/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேர்தல் செலவின பார்வையாளர்கள் தமிழக எல்லை பகுதியில் ஆய்வு
/
தேர்தல் செலவின பார்வையாளர்கள் தமிழக எல்லை பகுதியில் ஆய்வு
தேர்தல் செலவின பார்வையாளர்கள் தமிழக எல்லை பகுதியில் ஆய்வு
தேர்தல் செலவின பார்வையாளர்கள் தமிழக எல்லை பகுதியில் ஆய்வு
ADDED : மார் 28, 2024 11:22 PM

பந்தலுார்:பந்தலுார் அருகே, மாநில எல்லை சோதனை சாவடிகளில், தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு செய்தார்.
தமிழக எல்லை பகுதியாக, நீலகிரி மாவட்டம் பந்தலுார் உள்ளது. இங்கு தாளூர் மற்றும் சோலாடி சோதனை சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில், தேர்தல் செலவின பார்வையாளர் கிரண் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, 'மாநில எல்லை சோதனை சாவடிகளில், வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் குறித்தும், தேர்தல் நேரங்களில் பணம் மற்றும் பரிசுபொருட்கள் மட்டும் இன்றி, மது பாட்டில்கள் உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வருவதையும் கண்காணிக்க வேண்டும்.
வெளியில் இருந்து வரும் வாகனங்கள் அனைத் தும் முழுமையான பரிசோதனைக்கு பின்னர் அனுமதிக்க வேண்டும். பறக்கும் படையினர் உரிய ஆய்வு மேற்கொண்டு ஆவணங்களுடன் கொண்டு வரும் பணம் மற்றும் பொருட்கள் தவிர, பிறவற்றை பறிமுதல் செய்து, உரிய ஆய்வுக்கு பின்னர் ஆவணங்கள் சமர்ப்பித்தால் வழங்க வேண்டும்.
ஆய்வு பணியின் போது ஏதேனும் குறைகள் இருந்தால் தகவல் தெரிவித்து அதனை நிவர்த்தி செய்ய வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டது.
மேலும், சோதனை சாவடிகளில் பறக்கும் படையினர், பறிமுதல் செய்த தொகைகள் மற்றும் விவரங்களை கேட்டறிந்தார். மாநில எல்லைகளில் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, பந்தலுார் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் குமாரமங்கலம், வி.ஏ.ஓ.,க்கள் அசோக்குமார், யுவராஜ், சண்முகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

