/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மின்வாரிய நிரந்தர பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
/
மின்வாரிய நிரந்தர பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
மின்வாரிய நிரந்தர பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
மின்வாரிய நிரந்தர பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜூலை 10, 2024 02:11 AM

ஊட்டி;ஊட்டி மின்வாரிய அலுவலகம் முன்பு, மின்வாரிய நிரந்தர பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது.
ஊட்டி கிளை தலைவர் ரவி சண்முகம் தலைமை வகித்தார். போராட்டத்தில், 'அனைத்து காலி பணியிடங்களை நிரப்பி, தனியார் மையப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும்; வேலை பளு ஒப்பந்தத்திற்கு எதிராக வெளியிட்டுள்ள உத்தரவுகளை திரும்ப பெற்று, முத்தரப்பு ஒப்பந்தத்தில் உள்ள அநீதிகளை களைந்து, அரசு உத்தரவாதத்துடன் கூடிய புதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும்.
பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கவேண்டிய பணப்பலன்கள் காலதாமதம் இல்லாமல் உடனே வழங்கவேண்டும். அரசு உயிர்கள் பெறுகின்ற குடும்ப நல நிதி, 5 லட்சம் ரூபாயை, மின்வாரியத்திலும் அமல்படுத்த வேண்டும்.
மின்வாரியத்தில் உயிரிழக்கும் மின்வாரிய பணியாளர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் சிறப்பு நிதி அறிவித்ததற்கான, அறிவிப்பு அரசாணை உத்தரவவை வெளியிட வேண்டும்,' என்பன, உட்பட, கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், மாவட்ட செயலாளர் சண்முகம், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் வினோத் மற்றும் பொருளாளர் நவீன் சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.