/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊருக்குள் வரும் யானைகள் 'டிரோன்' மூலம் கண்காணிப்பு
/
ஊருக்குள் வரும் யானைகள் 'டிரோன்' மூலம் கண்காணிப்பு
ஊருக்குள் வரும் யானைகள் 'டிரோன்' மூலம் கண்காணிப்பு
ஊருக்குள் வரும் யானைகள் 'டிரோன்' மூலம் கண்காணிப்பு
ADDED : ஜூலை 06, 2024 01:24 AM

கூடலுார்;கூடலுார் தேவர்சோலை பகுதியில் ஊருக்குள் வரும் காட்டு யானைகளை, வனத்துறையினர் 'டிரோன்' கேமரா உதவியுடன் கண்காணித்து விரட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூடலுார் தொரப்பள்ளி, குணில், அல்லுார், புத்துார் வயல், தேவர்சோலை, கல்லிங்கரை, குச்சிமுச்சி, கவுண்டங்கொல்லி உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள், இரவில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்
இந்நிலையில், தொரப்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை, முதுமலையிலிருந்து அழைத்துவரப்பட்ட இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் விரட்டும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தேவர்சோலை அருகே முகாமிட்டுள்ள ஐந்து காட்டு யானைகளை, 'டிரோன்' கேமரா உதவியுடன் கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில்,'தொரப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிக்கும் வரும், காட்டு யானைகளை கும்கி யானைகள் உதவியுடனும், தேவர்சோலை சுற்றுவட்டார பகுதிகளில் முகாமிட்டுள்ள, காட்டு யானைகள் இருப்பிடத்தை 'டிரோன்' கேமரா உதவியுடன், கண்காணித்து விரட்டு பணியை மேற்கொண்டு வருகிறோம்,' என்றனர்.