sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மழையின் போது குட்டியை பாதுகாக்கும் யானைகள்

/

மழையின் போது குட்டியை பாதுகாக்கும் யானைகள்

மழையின் போது குட்டியை பாதுகாக்கும் யானைகள்

மழையின் போது குட்டியை பாதுகாக்கும் யானைகள்


ADDED : ஆக 27, 2024 01:49 AM

Google News

ADDED : ஆக 27, 2024 01:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலூர்;கூடலுாரில் குட்டி யானையை மழையில் நனையாமல் இருக்க, மற்ற யானைகள் அதனை சுற்றி நின்று பாதுகாக்கும் காட்சி மக்களை வியப்பில் ஆழ்த்தியது.

கூடலுார் பகுதியில் பருவமழையை தொடர்ந்து பசுமைக்கு மாறியுள்ள புல்வெளிகளில் காட்டு யானைகள் கூட்டமாக மேய்ச்சலில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டத்தில், உள்ள சிறிய குட்டிகளை தாய் யானை மனிதர்களை போல கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வருகிறது.

திடீரென மழை பெய்தால், தாய் யானை தன் குட்டியை, கால்களுக்கு இடையே பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும். மற்ற யானைகள், அதனை சுற்றி நெருக்கமாக, கூடி நின்று, குட்டி யானை பாதுகாப்புக்கு உதவி வருகின்றன. இதனை பார்த்து மக்கள் வியப்படைந்தனர்.

கால்நடை டாக்டர்கள் கூறுகையில், 'பொதுவாக காட்டு யானைகள் தன் குட்டியை, மனிதர்களை போலவே பாதுகாத்து வளர்க்க கூடியது. மழையின் போது, குட்டியை சுற்றி கூட்டமாக நின்று கொள்ளும். இதன் மூலம் குட்டி யானை மழையில் நனையாமலும், யானைகளில் உடல் வெப்பம், குளிரின் போது குட்டிக்கு இதமாக இருக்கும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us