ADDED : ஆக 02, 2024 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி : ஊட்டி நஞ்சநாடு கிராமத்தில் நடந்த விழாவில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், பணம் எடுக்கும் அட்டை மற்றும் தகவல் கையேடுகளை வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார்.
அதில், 'நீலகிரி மாவட்டத்தில், மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 'குன்னுார் வட்டத்தில், 19 ஆயிரத்து, 332 பேர்; கூடலுார் வட்டத்தில், 22 ஆயிரத்து, 950; கோத்தகிரி வட்டத்தில், 16 ஆயிரத்து, 263; குந்தா வட்டத்தில், 6,718; பந்தலுார் வட்டத்தில், 20 ஆயிரத்து, 19; ஊட்டி வட்டத்தில், 27 ஆயிரத்து, 468 மகளிர்கள்,' என, மொத்தம் ஒரு லட்சத்து, 12 ஆயிரத்து, 750 மகளிர்களுக்கு, மாதந்தோறும் தலா 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது,' என, தெரிவிக்கப்பட்டது.