ADDED : ஜூலை 12, 2026 08:51 PM
அ நிறம் | அளவு
கூடலூர்:
கூடலூர் புளூ மவுண்டன் ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி கூடலூரில் நடந்தது. தலைவர் தன்ராஜ் தலைமை வகித்தார். தலைவராக வர்கீஸ், செயலாளராக பரசுராம், பொருளாளராக சேகர் ஆகியோர் பொறுப்பேற்று கொண்டனர். கூடலூர் எம்.எல்.ஏ., திராவிட மணி, மாவட்ட ஆளுநர் சோபாலன், வேலுச்சாமி, சிறப்புரையாற்றினர். கடந்த ஆண்டு ரோட்டரி கிளப் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து விளக்கினர். அடுத்த ஆண்டு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து தலைவர் வர்கீஸ் விளக்கினார்.
விழாவில், உதவி ஆளுநர் ஜான்சன் மற்றும் நிர்வாகிகள் பொதுநல அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். செயலாளர் பரசுராம் நன்றி கூறினார்.
