ADDED : ஜூலை 12, 2026 09:20 PM
அ நிறம் | அளவு
குன்னூர்:
குன்னூரில் சாலையில் விழுந்த மரத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்த நிலையில் நேற்று வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
எனினும் நேற்று மதியம் குன்னூர் கோத்தகிரி சாலையில் வண்டிச்சோலை அருகே சிறிய மரம் மின்கம்பிகள் மீது விழுந்தது.
உடனடியாக மின் சப்ளை நிறுத்தப்பட்டது. குன்னூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை வெட்டி அகற்றினர். சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, மின் கம்பிகளை ஊழியர்கள் சீரமைத்த பின், மின் சப்ளை கொடுத்தனர்
