/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பசுந்தேயிலை வரத்து உயர்வு மகிழ்ச்சியில் விவசாயிகள்
/
பசுந்தேயிலை வரத்து உயர்வு மகிழ்ச்சியில் விவசாயிகள்
பசுந்தேயிலை வரத்து உயர்வு மகிழ்ச்சியில் விவசாயிகள்
பசுந்தேயிலை வரத்து உயர்வு மகிழ்ச்சியில் விவசாயிகள்
ADDED : செப் 11, 2024 03:04 AM

கோத்தகிரி;நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரம், தேயிலை விவசாயத்தை நம்பி உள்ளது. 'விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள்,' என, மூன்று லட்சம் பேர், நேரிடையாகவோ, மறை முகமாகவோ இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக, ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, 18 ரூபாய்க்கு குறையாமல் விலை கிடைத்து வந்த நிலையில், கடந்த மூன்று வாரங்களாக, 25 ரூபாய் வரை விலை கிடைக்கிறது.
இந்த விலை ஏற்றத்தால், விவசாயிகள் ஓரளவு ஆறுதல் அடைந்து வருகின்றனர். தொழிலாளர்களின் கூலி, உரம், பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் தோட்ட பராமரிப்பு செலவு உள்ளிட்ட செலவினங்கள் அதிகமாக உள்ளதால், தற்போது கிடைத்து வரும் விலை, போதுமானதாக இல்லை.
இருப்பினும், கடந்த காலங்களை ஒப்பிடுகையில், விலை ஓரளவு உயர்ந்துள்ளது. நடப்பாண்டு, மழை பெய்துள்ள நிலையில், உரமிட்டு பராமரித்த தோட்டங்களில், பசுந்தேயிலை வரத்து, கணிசமாக உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.