/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விளை நிலங்களில் பெட்ரோல் குழாய் மாற்றம் செய்ய விவசாயிகள் கோரிக்கை
/
விளை நிலங்களில் பெட்ரோல் குழாய் மாற்றம் செய்ய விவசாயிகள் கோரிக்கை
விளை நிலங்களில் பெட்ரோல் குழாய் மாற்றம் செய்ய விவசாயிகள் கோரிக்கை
விளை நிலங்களில் பெட்ரோல் குழாய் மாற்றம் செய்ய விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஜூலை 01, 2024 02:28 AM

சூலுார்;பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில், இருகூரில் இருந்து கர்நாடக மாநிலம் தேவனஹந்தி வரை, 320 கி.மீ., துாரத்துக்கு குழாய் வாயிலாக பெட்ரோலிய பொருட்கள் கொண்டு செல்லும் திட்டத்தை துவக்கி உள்ளது. இதற்காக, இருகூர், ராவத்துார், காங்கயம் பாளையம், காடாம்பாடி பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் குழாய்கள் பதிக்கும் பணி மேற்கொண்டு வருகிறது.
விவசாய நிலங்கள் வழியாக குழாய்கள் பதிக்கும் திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், தாசில்தார் முன்னிலையில், எண்ணெய் நிறுவன அதிகாரிகள், விவசாயிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
அதில், சந்தை மதிப்பில், 20 சதவீத தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என, அதிகாரிகள் கூறினர். அதை ஏற்க மறுத்த விவசாயிகள், மாற்றுப்பாதையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், குழாய் பதிக்கும் பணி மீண்டும் துவங்கப்பட்டது. அதை விவசாயிகள் தடுத்து நிறுத்தினர். பெட்ரோலிய நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால், பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கணேசன் கூறியதாவது:
கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன் எங்கள் விவசாய நிலங்கள் வழியாக குழாய் பாதிக்கப்பட்டுள்ளது. குழாய் பதித்துள்ள, 60 அடி இடத்தில் எந்த விவசாய பணியும் செய்து வருவாய் ஈட்ட முடியவில்லை. வங்கியில் எந்தவொரு கடனும் வழங்க மறுக்கின்றனர். அதனால், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள நிலங்கள் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் எங்கள் நிலங்கள் கேட்பாரற்று கிடக்கிறது. தற்போது, இரண்டாவது குழாயை பதிக்கும் பணியை துவங்கியுள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகிறோம். மாற்றுப்பாதையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. இதுகுறித்து கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
பெட்ரோல் குழாய் பதிப்பு திட்ட மாற்றுப்பாதை ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த ரவிக்குமார் கூறுகையில், ''இத்திட்டத்தின் கீழ், இருகூரில் இருந்து முத்துார் வரை, 74 கி.மீ., துாரம் விளை நிலங்கள் வழியாக கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே பதிக்கப்பட்ட குழாய்களின் ஆயுட்காலம் இன்னும் ஐந்து ஆண்டுகள் தான் உள்ளது என, தெரிய வந்துள் ளது. அதற்காக மீண்டும் வேறு குழாய் பதிப்பார்கள். இப்படியே போனால் எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும். '' என்றார்.